அமெரிக்காவில் விமான விபத்து; 4 பேர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-04-21 08:17 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணம் மெனோமொனி நகரில் இருந்து இல்லியான்ஸ் மாகாணத்திற்கு சிசா 180 என்ற சிறியரக விமானம் நேற்று காலை புறப்பட்டது. அந்த விமானத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் பயணித்தனர்.

இல்லியான்ஸ் மாகாணத்தின் டிரில்லா நகரில் விமானம் தரையிறங்க தாழ்வாக பறந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி மீது விமானம் உரசியது. இதையடுத்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையோர வயல்பகுதியில் மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்