நடுவானில் மோதுவது போல் சென்ற விமானங்கள் - விமானியின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு
சுதாரித்துக்கொண்ட விமானி உடனடியாக 500 அடி உயரத்துக்கு கீழே இறக்கினார்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஹாலிவுட் பர்பாங்க் விமான நிலையத்தில் இருந்து ரேடார்-24 என்ற விமானம் புறப்பட்டது. நடுவானில் சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது என்.335 ஏ.எக்ஸ். என்ற விமானம் அதன் மீது மோதுவது போல சென்றது.
இதனை சுதாரித்துக்கொண்ட விமானி உடனடியாக 500 அடி உயரத்துக்கு கீழே இறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் திடீரென விமானம் கீழே இறங்கியதில் அதில் இருந்த 2 பணிப்பெண்கள் காயம் அடைந்தனர். விமானம் தரையிறங்கியதும் அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.