போலந்து அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கி முன்னிலை

போலந்து அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.;

Update:2025-06-02 05:11 IST

Image Courtesy : @trzaskowski_

வார்சா,

ஐரோப்பிய நாடான போலந்தில் அதிபர் ஆண்ட்ரெஜ் டுடாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் அங்கு நடைபெற்று வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது.

இதில் தாராளவாத ஐரோப்பிய ஒன்றிய சார்பு வேட்பாளரான ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கியும் (வயது 53), பழமைவாத கட்சி சார்பில் கரோல் நவ்ரோக்கி (42) ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறினர்.

இதனையடுத்து 2-வது கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதுவரை வெளியான முடிவுகளின்படி ரபால் டிர்சாஸ்கோவ்ஸ்கியும் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில், வெற்றியை உறுதி செய்த ரபாலுக்கு அவரது கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்