உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் - 21 பேர் பலி
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 282வது நாளாக நீடித்து வருகிறது.;
கீவ்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 282வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர்.