அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி
ஆசிம் முனிருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மதிய விருந்து அளிக்கிறார்.;
வாஷிங்டன்,
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர். இவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திக்கிறார்.
வெள்ளைமாளிகையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஆசிம் முனிருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மதிய விருந்து அளிக்கிறார். முன்னதாக, கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப் மாநாடு நிறைவடைவதற்குள் அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான் தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.