3-வது டெஸ்ட்: ஆடும் லெவனில் இடம் பெறப்போவது யார்? ரிஷப் பண்ட் பதில்
இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.;
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில் , இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், லார்ட்ஸ் டெஸ்டுக்கான இந்திய ஆடும் லெவன் அணி எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பினர் . அதற்கு அவர்,
'அணியில் யார்-யார் இடம் பெறுவது என்ற ஆலோசனை இன்னும் சென்று கொண்டிருக்கிறது. சில சமயம் ஆடுகளத்தின் நிறம் இரண்டு நாளில் மாறி விடும். அதனால் 3 வேகம், 2 சுழல் அல்லது 3 வேகம், ஒரு சுழல் இப்படி எந்த கலவையில் இறங்கப்போகிறோம் என்பதை போட்டிக்கு முன்பாகத் தான் முடிவு செய்வோம்' என்றார்.