களத்தில் சாய் சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் இடையே தமிழில் நடந்த உரையாடல்.. வீடியோ வைரல்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்த உரையாடல் நடந்தது.;

Update:2025-07-28 14:57 IST

மான்செஸ்டர்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.

311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

முன்னதாக இந்த 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் - சாய் சுதர்சன் இடையே தமிழில் நடந்த உரையாடல் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து பேட்டிங் செய்கையில் ஒரு ஓவரை வீச வாஷிங்டன் சுந்தர் வந்தார். அப்போது அவரிடம் சாய் சுதர்சன் பந்தை கொடுத்தார். அந்த சமயத்தில் இந்த உரையாடல் நடந்தது.

வாஷிங்டன் சுந்தர் - சாய் சுதர்சன் இடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:-

சாய்: பந்து ஷைன் (பளபளப்பு) ஆகல.. ஷைன் பண்றேன்.. ஷைன் ஆகமாட்டிக்குது

சுந்தர்: ஏன்?

இவ்வாறு அவர்களுக்கு இடையிலான உரையாடல் அமைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்