பெங்களூரு அணியின் வெற்றியும்... தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையும்

18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.;

Update:2025-06-04 11:48 IST

புதுடெல்லி:

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி, 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணியின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக, அதாவது 18 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் கோப்பையை வென்றுள்ள பெங்களூரு அணிக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையமும் பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, முதல் முறை வாக்காளர்களை வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. கிரிக்கெட் களத்தில் சாம்பியன்களைப் போன்று இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்தி ஜனநாயகத்தில் பிரகாசிக்க வேண்டும் என கூறியிருக்கிறது.

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு:-

18 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. புதிய சாம்பியன் ஆர்.சி.பி.-க்கு வாழ்த்துகள்!

18 வயது ஆகிவிட்டதா? நீங்கள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது! உடனே வாக்காளராக பெயரை பதிவுசெய்து, ஒரு சாம்பியனைப் போல வாக்களிக்கத் தயாராக இருங்கள்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்