முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்

இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.;

Update:2025-05-29 09:23 IST

லண்டன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தோல்வியை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இங்கிலாந்து அணி களம் காணும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.

இங்கிலாந்து அணி வீரர்களில் உத்தேச பட்டியல்:-

ஹாரி புரூக் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், டாம் பான்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேமி ஸ்மித்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களில் உத்தேச பட்டியல்:-

பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கீசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அமீர் ஜாங்கூ, ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, அல்சாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப்/ஜெய்டன் சீல்ஸ்.

Tags:    

மேலும் செய்திகள்