முதல் டி20 போட்டி: நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடக்கிறது;

Update:2025-10-18 06:27 IST

கிறைஸ்ட்சர்ச்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டிம் ராபின்சனும், பந்து வீச்சில் மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், கைல் ஜாமிசன், ஜேக்கப் டப்பியும் வலுசேர்க்கின்றனர்.

இதேபோல் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஜேக்கப் பெத்தேல், சாம் கர்ரன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித் என தரமான வீரர்களுக்கு பஞ்சமில்லை. சமபலம் வாய்ந்த அணிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி காலை 11.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்