இந்திய 'பி' அணியே பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் .. முன்னாள் வீரர் கருத்து
இந்திய 'பி' அணியே, தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் அதுல் வாசன் கூறியுள்ளார்;
துபாய் ,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை (14-ம் தேதி) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய 'பி' அணியே, தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை வீழ்த்தும் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் அதுல் வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
இந்தியாவின் பி அணி இந்த பாகிஸ்தான் அணியையும் தோற்கடிக்கும். ஏனென்றால் நிலைமை மாறிவிட்டது. 90- களில் நாங்கள் விளையாடியபோது, அவர்கள் மிகச் சிறந்த அணியாக அவர்கள் மிகச் சிறந்த அணியாக இருந்தனர். இப்போது அவர்களை விட நாம் மிகச் சிறந்த அணியாக இருக்கிறோம். இவ்வாறு அதுல் வாசன் கூறினார்.