இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய முன்னணி வீரர்கள் விலகல்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.;

Update:2025-10-14 21:15 IST

கோப்புப்படம் 

மெல்போர்ன்,

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் மற்றும் குடும்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஸ்திரேலிய அணியில் ஜோஷ் பிலிப்ஸ் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்