இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு.. முன்னணி வீரர்களுக்கு இடம்

இங்கிலாந்து - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி 26-ம் தேதி நடைபெறுகிறது.;

Update:2025-10-20 01:03 IST

image courtesy:PTI

வெலிங்டன்,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

டி20 போட்டிகள் முடிவடைந்த உடன் ஒருநாள் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான அந்த அணியில் வில்லியம்சன், கான்வே, கைல் ஜேமிசன், டாம் லதாம், நாதன் ஸ்மித் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணி விவரம்: மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லதாம், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்

Tags:    

மேலும் செய்திகள்