இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.;

Update:2025-06-23 13:07 IST

Image Courtesy: @BCBtigers

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மெஹதி ஹசன் மிராஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணி விவரம்: மெஹதி ஹசன் மிராஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், நைம் ஷேக், நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, தவ்ஹித் ஹ்ரிடோய், லிட்டன் தாஸ், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், ரிஷாத் ஹ்சைன், தன்விர் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், தஸ்கின் அகமது, நஹித் ராணா. 


Tags:    

மேலும் செய்திகள்