ரஞ்சி கோப்பை காலிறுதி: நாளை தொடக்கம்... தமிழ்நாடு - விதர்பா மோதல்

ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி சுற்று நாளை ஆரம்பமாக உள்ளது.;

Update:2025-02-07 18:35 IST

கோப்புப்படம்

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

அதன்படி சவுராஷ்டிரா, குஜராத், அரியானா, மும்பை, விதர்பா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

இந்நிலையில் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. இதில் ஜம்மு காஷ்மீர்-கேரளா, விதர்பா- தமிழ்நாடு , அரியானா- மும்பை மற்றும் சவுராஷ்டிரா- குஜராத் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்