ரவீந்திரா, டேரில் மிட்செல் அரைசதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது.;

Update:2025-10-29 15:07 IST

Image Courtesy: @BLACKCAPS

வெல்லிங்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1-0 என இங்கிலாந்து கைப்பற்றியது. தொடர்ந்து நடந்து வரும் ஒருநாள் தொடரில் முதல் போட்டியின் முடிவில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 36 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 42 ரன் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் பிளெய்ர் டிக்னெர் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 176 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து 33.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என நியூசிலாந்து வென்றுள்ளனது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி வரும் நவம்பர் 1ம் தேதி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்