சச்சின், தோனிக்கு இடமில்லை... இந்தியா - இங்கிலாந்து ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த புஜாரா

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது;

Update:2025-07-20 10:12 IST

கோப்புப்படம்

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்தியா அணி வீரர் புஜாரா ஒருங்கிணைந்த இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார். அதில் ஆச்சரியப்படும் விதமாக இந்திய முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், தோனிக்கு அவர் இடம் அளிக்கவில்லை.மேலும், அலெஸ்டர் குக், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற இங்கிலாந்து ஜாம்பவான்களையும் அவர் புறக்கணித்துள்ளார்.

இந்த அணியில் தொடக்க வீரர்களாக இங்கிலாந்தின் அலெக் ஸ்டீவர்ட் மற்றும் இந்தியாவின் ராகுல் டிராவிட்டை  தேர்ந்தெடுத்துள்ளார். தொடர்ந்து மிடில் ஆர்டர் வீரர்களாக ஜோ ரூட், விராட் கோலி மற்றும் வி.வி.எஸ். லக்ஷமன் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்.

இதுதவிர்த்து ஆல் ரவுண்டர்களாக இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் சேர்ந்து இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாப் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார். மேலும், 12வது வீரராக இங்கிலாந்து வீரர் மேத்யூ ஹோகார்டை தேர்வு செய்துள்ளார்.

புஜாரா தேர்வு செய்த அணி விவரம்: அலெக் ஸ்டீவர்ட் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), விராட் கோலி, விவிஎஸ் லட்சுமணன் (இருவரும் இந்தியா), பென் ஸ்டோக்ஸ், ஆண்ட்ரூ பிளின்டாப் (இருவரும் இங்கிலாந்து), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி (நால்வரும் இந்தியா). (12-வது வீரர்: மேத்யூ ஹோகார்ட், இங்கிலாந்து).

Tags:    

மேலும் செய்திகள்