வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு
இந்த அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் அப்ரிடிக்கு இடம் அளிக்கப்படவில்லை.;
Image Courtesy: @ICC
கராச்சி,
வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் வங்காளதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாகின் ஷா அப்ரிடிக்கு இடம் அளிக்கப்படவில்லை.
பாகிஸ்தான் அணி விவரம்: சல்மான் அலி ஆஹா (கேப்டன்), ஷதாப் கேப்டன் (துணை கேப்டன்), அப்ரார் அகமது, பஹீம் அஷ்ரப், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் டலட், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது வாசிம் ஜுனியர், முகமது இர்பான் கான், நசீம் ஷா, சைம் அயூப், ஷபீப்சடா பர்ஹான்.