பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; வங்காளதேச முன்னணி வீரர் விலகல்
வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆட உள்ளது.;
Image Courtesy: @BCBtigers
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரின் ஆட்டங்கள் அனைத்தும் லாகூரில் நடக்கிறது. இந்த தொடருக்கான வங்காளதேச அணி சில தினங்களுகு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வங்காளதேச முன்னணி வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மான் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக ஆடி வரும் முஸ்தாபிசுர் ரஹ்மான் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தின் போது காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த காயம் குணமாக குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் எனவும், இதன் காரணமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.