பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.;
Image Courtesy: @BCBtigers
டாக்கா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் டாக்காவில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடிய வீரர்கள் மாற்றமின்றி இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணி விவரம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சின் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், முகமது நைம், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், மெஹதி ஹசன், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சகிப், முகமது சைபுதீன்.