டி20 உலகக்கோப்பை தொடர்; அமெரிக்கா புறப்பட்ட நெதர்லாந்து அணி

டி20 உலகக்கோப்பை தொடரில் கலந்து கொள்ள நெதர்லாந்து அணி அமெரிக்கா புறப்பட்டது.;

Update:2024-05-26 08:21 IST

Image Courtesy: @ICC / @KNCBcricket

ஆம்ஸ்டர்டாம்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது.

இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சென்ற வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக நெதர்லாந்து அணி அமெரிக்கா புறப்பட்டது.

இது தொடர்பான புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்