எந்தவொரு அணியையும் வீழ்த்தும் திறமை இருக்கிறது: இந்தியா போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது;

Update:2025-09-13 16:08 IST

துபாய் ,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நாளை (14-ம் தேதி) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது,

நாங்கள் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக நல்ல கிரிக்கெட் விளையாடியுள்ளோம்.நாங்கள் எங்களுடைய திட்டங்களை நீண்ட காலத்திற்கு வெளிப்படுத்த முடியும் என்றால், எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் திறமை எங்களிடம் உள்ளது.எங்களது பேட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஓமனுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள்.நாங்கள் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மூன்று பேரும் மாறுபட்ட ஸ்பின்னர்கள். நாங்கள் சைம் என்பவரையும் கொணடுள்ளோம். இவர் புதிய மற்றும் பழைய பந்தில் சிறப்பாக பந்து வீசிக் கொண்டிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் என வரும்போது, ஏராளமான ஸ்பின்னர்கள் தேவை.இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்