மகளிர் உலகக்கோப்பை: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.;

Update:2025-10-22 14:35 IST

Image Courtesy: @ICC

கொழும்பு,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் கடுமையாக போராடும்.

இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்