மகளிர் உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதுகிறது.;

Update:2025-09-11 06:25 IST

image courtesy:ICC

கொழும்பு,

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கையில் வருகிற 30-ந்தேதி தொடங்கி நவம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை கவுகாத்தியில் எதிர்கொள்கிறது. அக்.1-ந்தேதி இந்தூரில் நடக்கும் அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியன் நியூசிலாந்துடன் மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் சமாரி அத்தபத்து கேப்டனாக தொடருகிறார். ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்‌ஷி சில்வா, அனுஷ்கா சஞ்ஜீவானி முன்னணி வீராங்கனைகள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம் பின்வருமாறு:-

சமாரி அத்தபத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, கவிஷா தில்ஹரி, நிலாக்‌ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவானி, இமிஷா துலானி, டேவ்மி விஹாங்கா, பிமி வத்சலா, இனோகா ரனவீரா, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோத்னி, மால்கி மதரா, அச்சினி குலசூரியா.

Tags:    

மேலும் செய்திகள்