உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெண்கல பதக்கம் வென்ற சாத்விக்-சிராக் ஜோடி

அரையிறுதியில் சாத்விக்-சிராக் ஜோடி தோல்வியை தழுவியது.;

Update:2025-08-31 16:42 IST

image courtesy:PTI

பாரீஸ், 

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீனாவின் லியூ யி - சென் போ ஜோடியுடன் மோதியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை சீன ஜோடி கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. லியு யி - சென் போ இணை இந்த ஆட்டத்தில் 21-19, 18-21 மற்றும் 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

தோல்வியடைந்த இந்திய ஜோடிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. உலக சாம்பியன்ஷிப் அரையிறுதியில் தோற்றாலும் வெண்கல பதக்கம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்