ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது.;
image courtesy: Zimbabwe cricket twitter
ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி ஹராரேயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெய்க் எர்வின் தலைமையிலான அந்த அணியில் சிக்கந்தர் ராசா, பென் கர்ரன், வெலிங்டன் மசகட்சா போன்ற திறமையான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வே அணி விவரம்: கிரெய்க் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், தனகா சிவாங்கா, பென் குர்ரன், பிராட் எவன்ஸ், ராய் கையா, தனுனுர்வா மகோனி, வெலிங்டன் மசகட்ஸா, டினோடெண்டா மபோசா, பிளஸ்ஸிங் முசரபானி, ஆன்டும் நக்வி, ரிச்சர்ட் ங்கராவா, சிக்கந்தர் ராசா, தபத்ஸ்வா சிகா, பிரெண்டன் டெய்லர், நிக் வெல்ச்.