4 நாடுகள் மகளிர் ஆக்கி: இந்திய அணி 4-வது வெற்றி பெற்று அசத்தல்

இந்திய அணி தனது 5-வது ஆட்டத்தில் உருகுவே உடன் மோதியது.;

Update:2025-06-01 15:50 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

ரோசாரியோ,

அர்ஜென்டினா, இந்தியா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் இடையிலான சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் 4 ஆட்டங்களில் 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வி பெற்றிருந்தது.

இதனையடுத்து இந்தியா தனது 5-வது ஆட்டத்தில் உருகுவே அணியுடன் இன்று மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்தியா தரப்பில் ஹினா மற்றும் லால்ரின்புய் தலா ஒரு கோல் அடித்தனர். உருகுவே தரப்பில் இனெஸ் டி போசாடாஸ் மற்றும் மிலாக்ரோஸ் சீகல் தலா ஒரு கோல் அடித்தனர்.

இரு அணிகளும் சமநிலை வகித்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்