நெதர்லாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய 'ஏ' அணி படுதோல்வி

இந்தியா தரப்பில் ராஜீந்தர் சிங் மற்றும் செல்வம் கார்த்தி தலா ஒரு கோல் அடித்தனர்.;

Update:2025-07-21 17:30 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

ஜன்ட்ஹோவன்,

இந்திய 'ஏ' ஆக்கி அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் நெதர்லாந்தின் ஜன்ட்ஹோவன் நகரில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நெதர்லாந்துடன் மோதியது.

இதில் நெதர்லாந்து அணி அடுத்தடுத்து கோல்களை போட்டு தாக்கியது. இந்திய அணியால் 2 கோல்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. முடிவில் இந்திய ஏ அணி 2-8 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. இந்தியா தரப்பில் ராஜீந்தர் சிங் மற்றும் செல்வம் கார்த்தி தலா ஒரு கோல் அடித்தனர். இதன் மூலம் இந்திய ஏ ஆக்கி ஆணி தோல்வியோடு இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்