ஆக்கி இந்தியா மாஸ்டர்ஸ்: முதல் சீசன் ஜூன் 18-ம் தேதி சென்னையில் தொடக்கம்

இந்த தொடர் ஜூன் 18-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.;

Update:2025-05-24 05:01 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

சென்னை,

முதலாவது ஆக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பை தொடர் சென்னையில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 40-வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் 35-வயதுக்கு மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

போட்டிகள் பங்கேற்கும் அணிகளுக்கு ஏற்ப, லீக், நாக் அவுட்  முறையில் நடத்தப்பட உள்ளது. அணிகளின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஆக்கி இந்தியா அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மகளிர் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் அசுந்தா லக்ரா கூறுகையில், "முதல் முறையாக நடைபெறும் ஆக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பையில் பங்கேற்பது எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான மற்றும் உற்சாகமான தருணம். ஆக்கி நான் யார் என்பதை வடிவமைத்துள்ளது. என்னுடன் விளையாடிய சக நட்சத்திரங்களுடன் மீண்டும் களம் காண உள்ளது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்