ஜூனியர் மகளிர் 4 நாடுகள் ஆக்கி: இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றி

இந்திய அணி முதல் ஆட்டத்தில் சிலியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது.;

Update:2025-05-27 01:21 IST

image courtesy:twitter/@TheHockeyIndia

ரோசாரியோ,

இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே ஆகிய 4 நாடுகளை சேர்ந்த ஜூனியர் மகளிர் அணிகள் பங்கேற்றுள்ள சர்வதேச ஆக்கி போட்டி அர்ஜென்டினாவில் உள்ள ரோசாரியோ நகரில் நடந்து வருகிறது.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சிலியை வீழ்த்தி இருந்தது. இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் உருகுவே உடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கனிகா 2 கோல்களும், சோனம் ஒரு கோலும் அடித்தனர். உருகுவே தரப்பில் மிலாகிராஸ் மற்றும் அகுஸ்டினா மாரி தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனையடுத்து இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் அர்ஜென்டினாவுடன் இன்று மோதுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்