புரோ ஆக்கி லீக்: நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வி

இந்திய அணி தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.;

Update:2025-06-08 09:31 IST

Image courtesy:twitter/@TheHockeyIndia

ஆம்ஸ்டர்டாம்,

2024-25-ம் ஆண்டிற்கான புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டெல்வீனில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. நெதர்லாந்து தரப்பில் வான் டேம் திஜ்ஸ் 2 கோல்கள் அடித்தார். இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மட்டுமே ஒரு கோல் அடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்