ஆசிய ஜூனியர் பேட்மிண்டன்: காலிறுதியில் ஜப்பானிடம் தோல்வி கண்ட இந்தியா

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது.;

Update:2025-07-22 08:30 IST

கோப்ப்புபடம்

சோலோ,

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள சோலோ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான ஜப்பானை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 104-110 என்ற புள்ளி கணக்கில் போராடி வீழ்ந்தது. இந்த ஆட்டத்தில் பெரும்பகுதியில் முன்னிலை வகித்த இந்திய அணி கடைசி கட்டத்தில் கோட்டை விட்டதால் அரையிதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

Tags:    

மேலும் செய்திகள்