ஆசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்ற அர்ஜூன்-இளவேனில் இணை

இந்தியாவின் அர்ஜூன் பபுதா-இளவேனில் இணை, சீனாவின் டிங்கி லூ-ஜின்லு பெங் ஜோடியை எதிர்கொண்டது.;

Update:2025-08-24 07:05 IST

ஷிம்கென்ட்,

16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் பபுதா-இளவேனில் இணை, சீனாவின் டிங்கி லூ-ஜின்லு பெங் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் அர்ஜூன்-இளவேனில் ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-11 என்ற புள்ளி கணக்கில் சீன இணையை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இளவேனில், பஞ்சாப்பை சேர்ந்த அர்ஜூன் ஆகியோர் நடப்பு போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். இளவேனில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று இருந்தார். அர்ஜூன் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அணியில் அங்கம் வகித்தார். இதேபோல் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாம்பவி ஷிரவன்-நரேன் பிரணவ் ஜோடி 16-12 என்ற புள்ளி கணக்கில் சீன அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்