ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்ற மனு பாக்கர்

சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்;

Update:2025-08-19 17:05 IST

ஷிம்கென்ட்,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 219.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மனு பாக்கர் பெற்ற 10வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

Tags:    

மேலும் செய்திகள்