சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி

உன்னதி ஹூடா காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை உடன் மோதினார்.;

Update:2025-07-25 16:33 IST

image courtesy:PTI

சாங்சோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, ஜாப்பானை சேர்ந்த அகானே யமாக்குச்சி உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய யமாக்குச்சி 21-16 மற்றும் 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வியடைந்த உன்னதி ஹூடா தொடரிலிருந்து வெளியேறினார். 

Tags:    

மேலும் செய்திகள்