கிராண்ட் சுவிஸ் செஸ்: சாம் செவியனை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி
‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
சமர்கண்ட்,
‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 9-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 51-வது நகர்த்தலில் சாம் செவியனை (அமெரிக்கா) வீழ்த்தினார்.
பிரக்ஞானந்தா (இந்தியா)- அவான்டர் லியாங் (அமெரிக்கா), குகேஷ் (இந்தியா)- ராபர்ட் ஹோவன்னிசியான் (அர்மேனியா) இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.