கிராண்ட் சுவிஸ் செஸ்: 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி
குகேஷ் 5-வது சுற்றில் அமெரிக்காவின் அபிமன்யு மிஸ்ராவிடம் தோல்வியை தழுவினார்.;
image courtesy:PTI
சமர்கண்ட்,
‘பிடே’ கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இதில் ஓபன் பிரிவில் 4-வது சுற்றில் சக நாட்டவர் அர்ஜூன் எரிகைசியுடன் டிரா கண்ட உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 5-வது சுற்றில் அமெரிக்காவின் அபிமன்யு மிஸ்ராவிடம் தோல்வியை தழுவினார். மற்றொரு இந்திய வீரர் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவும் ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாமுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதன் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி 35-வது நகர்த்தலில் கேத்ரினா லாக்னோவிடம் (உக்ரைன்) டிரா செய்தார்.