ஹாங்காங் ஓபன்: லக்சயா சென் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
இந்தியாவின் லக்சயா சென், சக வீரரான எச்எஸ் பிரனாய் உடன் மோதினார் .;
ஹாங்காங்,
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சக வீரரான எச்எஸ் பிரனாய் உடன் மோதினார் .
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய லக்சயா சென் 15-21, 21-18, 21-10என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதி சுற்றில் சக வீரர் ஆயுஷ் ரெட்டி உடன் லக்சயா சென் மோதுகிறார்.