மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷிய வீரர்
இறுதிப்போட்டியில் இந்தோனேஷியாவின் அல்வி பர்ஹான் மற்றும் மலேசியாவின் ஜஸ்டின் ஹோ ஆகியோர் மோதினர்.;
கோப்புப்படம்
மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மக்காவ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தோனேஷியாவின் அல்வி பர்ஹான் மற்றும் மலேசியாவின் ஜஸ்டின் ஹோ ஆகியோர் மோதினர்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய இந்தோனேஷியாவின் அல்வி பர்ஹான் 21-15, 21-5 என்ற செட் கணக்கில் ஜஸ்டின் ஹோவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.