தேசிய தடகள போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

இந்த போட்டி தொடரில் மொத்தம் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.;

Update:2025-08-19 00:22 IST

சென்னை,

தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. 5 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இதில் ஆசிய தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஓட்டப்பந்தய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ்,  அபினயா, ஏஞ்சல் சில்வியா ஆகிய தமிழர்களும் அடங்குவர்.

தமிழகத்தை தவிர்த்து, ஆசிய விளையாட்டில் இரட்டை சாம்பியனும், ஒலிம்பியனுமான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங் (பஞ்சாப்), ஆசிய போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான டெல்லியை சேர்ந்த தேஜஸ்வின் சங்கர் (உயரம் தாண்டுதல்), முன்னாள் ஆசிய சாம்பியனான கேரளாவின் டிரிபிள் ஜம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், கார்த்திக் உன்னிகிருஷ்ணன், முரளி ஸ்ரீசங்கர் மற்றும் அம்லான் போர்கோஹைன் (அசாம்), பிரக்யான் சாகு (ஒடிசா), தேஜஸ் ஷிர்ஸ் (மராட்டியம்) உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த பிரபல வீரர், வீராங்கனைகளும் களம் இறங்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்