உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்த நீரஜ் சோப்ரா...ரசிகர்கள் அதிர்ச்சி
நீரஜ் சோப்ரா 8வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்;
டோக்கியோ,
20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நேற்று நடந்தது. இறுதிப்போட்டியை எட்டுவதற்கான தூரம் 84.50 மீட்டர் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை எட்ட வேண்டும் அல்லது அதிக தூரம் வீசும் டாப்-12 வீரர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள். இதில் மொத்தம் 37 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் கண்ட நடப்பு சாம்பியனான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா எளிதில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் தனது முதல் முயற்சியிலேயே 84.85 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தகுதி இலக்கை அடைந்தார்.
பதக்கத்துக்கான இறுதிப்போட்டி இன்று இன்று நடந்தது . இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா மிக மோசமாக செயல்பட்டார். முதல் வாய்ப்பில் 84.03 மீட்டர் தூரம் வீசினார் நீரஜ் சோப்ரா. தொடர்ந்து மற்ற வாய்ப்புகளில் அவர் 84.03 மீட்டருக்கும் குறைவாகவே வீசினார். இதனால் நீரஜ் சோப்ராவின் அதிகபட்சம் 84.03 மீட்டராக எடுத்துக்கொள்ளப்பட்டது .
இதனால் நீரஜ் சோப்ரா 8வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார் . பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மற்றொரு இந்திய வீரர் சச்சின் யாதவ் 86.27 தூரம் வீசி 4வது இடம் பிடித்த்து பதக்க வாய்ப்பை இழந்தார்.