உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி
லக்ஷயா சென் சீனாவின் ஷி யூ கியுடன் மோதினார்.;
image courtesy:PTI
பாரீஸ்,
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென், சீனாவின் ஷி யூ கியுடன் மோதினார்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷி யூ கியு 21-17 மற்றும் 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதிர்ச்சி தோல்வியடைந்த லக்ஷயா சென் முதல் சுற்றோடு நடையை கட்டினார்.