உலக ஜூனியர் பேட்மிண்டன்: பதக்கத்தை உறுதி செய்த இந்திய வீராங்கனை தன்வி ஷர்மா
தன்வி ஷர்மா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.;
image courtesy:PTI
கவுகாத்தி,
உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் தன்வி ஷர்மா, ஜப்பானின் சகி மாட்சுமோடோ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை இழந்த தன்வி சரிவில் இருந்து மீண்டு வந்து அடுத்த இரு செட்டுகளை கைப்பற்றினார். தன்வி ஷர்மா இந்த ஆட்டத்தில் 13-15, 15-9 மற்றும் 15-10 என்ற செட் கணக்கில் சகி மாட்சுமோடோவை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
அத்துடன் பதக்கத்தையும் உறுதி செய்தார். இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜூனியர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.