உலக ஜூனியர் பேட்மிண்டன்: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது;

Update:2025-10-10 07:28 IST

கவுகாத்தி,

உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு அணிகள் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு 44-45, 45-30, 45-33 என்ற செட் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது. உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். இன்று நடைபெறும் அரைஇறுதியில் இந்திய அணி இந்தோனேசியாவை சந்திக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்