கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 14 July 2023 1:31 AM IST (Updated: 14 July 2023 1:32 AM IST)
t-max-icont-min-icon

பிறரிடம் மலர்ந்த முகத்தோடு பழகும் கும்ப ராசி அன்பர்களே!

செய்யும் காரியங்கள் அனைத்தும் முக்கியமான திருப்புமுனைகளை கொண்டதாக அமையும். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்ற வரவுகளும் வந்துசேரும். காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி மாற்றம், சம்பள உயர்வு போன்றவற்றை எதிர்பார்க்கலாம். புதிய வேலைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். சொந்தத்தொழில் லாபகரமாக இருக்கும். புதிய நபர்களின் மூலம் தொழில் முன்னேற்றமும், நல்ல ஆதாயமும் வந்துசேரும். கூட்டுத்தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் சுமுகமான போக்கு காணப்படும். குடும்ப அங்கத்தினர்களின் மன வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் அனுசரித்துச் செல்லுங்கள். கலைஞர்கள் புதிய பணிகளில் உற்சாகமாக பங்கு பெறுவீர்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து வழிபடுங்கள்.


Next Story