கும்பம் - வார பலன்கள்
நண்பர்களை ஆதரித்துச் செல்லும் கும்ப ராசி அன்பர்களே!
உற்சாகமாக உழைத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் சிறிய தடைகளுக்குப்பின் கிடைக்கும். இருப்பினும் எதிர்பாராத செலவுகள் காத்திருக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி உயர்வோடு வேறு இடங்களுக்கு மாற்றம் கிடைக்கக்கூடும். சொந்தத் தொழிலில் ஈடுபடுவோர் வாடிக்கையாளர்களிடம் சுமுகமாக நடந்து கொள்வது நல்லது. கூட்டுமுயற்சியில் உள்ளவர்கள் வியாபார அபிவிருத்திக்காக கூட்டாளிகளுடன் கூடி ஆலோசிப்பார்கள். வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை அறிந்து கடன் கொடுப்பது அவசியம். குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான சிறுசிறு சிரமங்கள் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவுகள் இல்லத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் பெற்றாலும், அதற்கான ஊதியம் இருக்காது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூாியனுக்குரிய மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.