கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 22 Sept 2023 1:34 AM IST (Updated: 22 Sept 2023 1:35 AM IST)
t-max-icont-min-icon

எடுத்த காரியங்களை வெற்றியாக்கும் கும்ப ராசி அன்பர்களே!

தடைகளை உடைத்து ஏற்றமான பலன்களைப் பெற முயற்சி மேற்கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் புதிய பொறுப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகமாகும். உயரதிகாரியின் விருப்பப்படி முக்கிய வேலையை செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வீண் பேச்சுக்களால் சகப் பணியாளர்களுடன் மன வருத்தம் உண்டாகலாம்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், புதிய வாடிக்கையாளரின் அவசர வேலையை ஓய்வின்றிச் செய்து முடிப்பார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவர். குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளை குடும்ப அங்கத்தினர்களே சமாளித்து விடுவார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் பயணங்களின்போது கவனமாக இருங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வர்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

1 More update

Next Story