கும்பம் - வார பலன்கள்
அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்
காரியங்களை முயற்சியுடன் செய்யும் கும்ப ராசி அன்பர்களே!
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால், தடைகள் தோன்றக்கூடும். இருந்தாலும் நண்பர்களின் துணையோடு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வீண் பேச்சுக்களை குறைப்பது நல்லது. உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, வெளியூர் சென்றுவர நேரலாம். சொந்தத்தொழிலில் கவனமாக இல்லாவிட்டால், மீண்டும் அதே பணியைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் காணப்படும். கூட்டாளிகளிடம் அதிருப்தி இல்லாமல் பழகுவது வளர்ச்சிக்கு வித்திடும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றுப் பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குடும்பம் நன்றாக நடந்தாலும் சிறு சிறு பிரச்சினைகளும் இருக்கலாம். சுபகாரியங்கள் சிறு தாமதத்திற்குப் பின்நடைபெறும்.
பரிகாரம்: சிவாலயம் சென்று, சிவ பூஜைக்குரிய பொருட்களை சக்திக்கேற்றவாறு வாங்கிக் கொடுத்து வழிபடுங்கள்.