கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 10 March 2023 1:39 AM IST (Updated: 10 March 2023 1:40 AM IST)
t-max-icont-min-icon

யாரையும் புண்படுத்த விரும்பாத கும்ப ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை மாலை 6.19 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், நிலம் சம்பந்தமான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். சகோதர வழியில் இருந்த பகை மறைந்து நன்மை நடைபெறும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வளர்ச்சியையும், வருமானத்தையும் ஈட்டுவார்கள். கூட்டுத்தொழில் வியாபாரம் நல்லபடியாகவே நடந்து வரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் குறைவான அளவிலேயே கிடைக்கப் பெறும். ஆனாலும் வழக்கமான வாழ்க்கை வசதிகளில் குறைவேதும் இருக்காது. வாரத் தொடக்கத்தில் கொஞ்சம் சோர்ந்து காணப்படுவீர்கள். குடும்பத்தில் களிப்பும் நிம்மதியும் காணப்படும். பொதுவாழ்வில் பிரகாசமான எதிர்காலம் அமையலாம்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள்.


Next Story