கும்பம் - வார பலன்கள்


கும்பம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 17 March 2023 1:27 AM IST (Updated: 17 March 2023 1:28 AM IST)
t-max-icont-min-icon

கலைகளில் ஈடுபாடு கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

இந்த வாரம் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு, ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனைவி வழி உறவுகளிடம் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். கணவன்- மனைவி உறவில் ஏற்பட்டிருந்த விரிசல் நீங்கும்.

நீண்ட காலமாக பேசி தடைபட்டு வந்த திருமணம், இப்போது கைகூடும். சிலர் மந்திர உபதேசம் பெற்று, ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். அதற்காக அவர்களை கடிந்து கொள்வதை விடுத்து, அவர்களின் கவனக்குறைவுக்கான காரணத்தை ஆராய முற்படுங்கள்.

குலதெய்வ பூஜை செய்ய வாய்ப்பு வரும். எதிராளிகளின் தொல்லை நீங்கும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு தேவையான முயற்சிகளை தொடங்குவீர்கள். பங்குச்சந்தையில் நஷ்டங்களை சரிசெய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் பரபரப்பாக நடைபெறும்.

பரிகாரம்:- இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டுங்கள்.

1 More update

Next Story